Saturday, September 21, 2013

தோல்வியடைந்த கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் சரியே: ...

பாடசாலை: தோல்வியடைந்த கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் சரியே: ...:           "தேர்வில் தோல்வியடைந்த கணினி ஆசிரியர்களை, பணி நீக்கம் செய்தது சரியே; ஜனவரிக்குள், தேர்வு நடவடிக்கையை, பள்ளிக்கல்வித் துற... பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Tuesday, September 17, 2013

தமிழக பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில், வழக்கறிஞர்களின் வாதம் நேற்று முடிந்தது. மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தமிழ்நாடு, கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட, கோர்ட் அவமதிப்பு மனுவை, நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: கூடுதல் அட்வகேட் ஜெனரல், "652 காலியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப வேண்டும். முதலில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து, ஒன்றுக்கு ஐந்து என்கிற விகிதத்தில், 3,500 பேர் அடங்கிய பட்டியல் பெறப்பட வேண்டும். மாநிலம் முழுவதிலும் இருந்து பட்டியல் பெற, கணிசமான நேரம் தேவை. தேர்வு நடவடிக்கைகளை முடிக்க, ஆறு மாதம் வழங்க வேண்டும்' என்றார். தேர்வு நடவடிக்கைகளை உடனடியாக, அரசு துவங்க வேண்டும். இரண்டு மாதங்களில், கணிசமான பகுதியை முடிக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்குப் பின், வழக்கை பட்டியலிட வேண்டும். அதற்குள், நடவடிக்கை அறிக்கையை, பள்ளி கல்வித் துறையின், முதன்மை செயலர் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், கணினி ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை, நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. ஆசிரியர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சிலர், "புதிதாக, கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போது பணியில் இருப்பவர்களை தொடர அனுமதிக்க வேண்டும் என, தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதை பின்பற்றாமல், பணியில் இருந்து நீக்கி உள்ளனர்' என்றனர். பள்ளி கல்வித் துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "இரண்டு முறை வாய்ப்பு வழங்கியும், 50 சதவீத மதிப்பெண்களை, மனுதாரர்கள் பெறவில்லை. சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் தான், 652 பேர், பணி நீக்கம் செய்யப்பட்டனர்' என, கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு அரசு பிளீடர்கள் கிருஷ்ணகுமார், வேலுமணி ஆஜராகினர். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இவ்வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், "டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்தது.

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Tuesday, September 3, 2013

கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம்: விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. பழைய காலி பணியிடங்கள், 652 உடன், கூடுதல் பணியிடங்கள் சேர்த்து, அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளது. காலியாக உள்ள, 652 பணியிடங்களை, இரு மாதங்களுக்குள் நிரப்புவதற்கு, தேவையான நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பட்டதாரிகளை, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், தேர்வு செய்ய, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

பழைய காலி பணியிடங்களுடன், கூடுதலாக தேவைப்படும் இடங்களுக்கும் சேர்த்து, கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த டி.ஆர்.பி.,யின் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. ஒரு பணியிடத்திற்கு, ஐந்து பேர் வீதம், பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு, தகுதியானவர், தேர்வு செய்யப்படுவர்.

      நன்றி: http://www.teachertn.com/
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

கணினி ஆசிரியர்கள் நியமனம் எப்போது? பிளஸ் 2 மாணவர்கள் எதிர்பார்ப்பு

மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த கணினி ஆசிரியர்கள், 652 பேரை, அரசு பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பிளஸ் 2 கணினி பிரிவு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது என, மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக் கின்றனர்.

ஒப்பந்த அடிப்படையில், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த கணினி ஆசிரியர்கள், சிறப்பு தேர்வு அடிப்படையில், பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். தேர்வில் தகுதி மதிப்பெண் பெறாதவர்களை பணிநீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தமிழக அரசு, 652 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தது.

இதனால், பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம், பகுதிநேர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் தான் தற்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆசிரியர்கள், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான, மாணவர்களுக்கு பாடம் நடத்த நியமிக்கப்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் கணினி பட்டயம் பெற்றவர்கள்.

மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் நடத்த பி.எட்., பட்டாதாரிகளை நியமிக்க வேண்டும் என்பது விதிமுறை. பெரும்பாலான பள்ளிகளில் பகுதிநேர கணினி ஆசிரியர்களும் நியமிக்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. சில இடங்களில், மாற்றுப் பணியாக அருகில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களை கொண்டு வாரத்தில், இரண்டு நாட்கள் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 

நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாவிட்டால், அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கவும் மாணவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கணினி ஆசிரியர்கள் நியமனம் குறித்து ஆலோசித்து வருகிறோம். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்," என்றார்.

நன்றி : http://www.teachertn.com/
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய