Sunday, January 19, 2014

தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக மீண்டும் சிறப்பு தகுதி தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் 11 மற்றும் 12–ம் வகுப்புகளில் கம்ப்யூட்டர் பாடம் நடத்த தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை அரசு நிறுவனமாக எல்காட் நிறுவனம் நியமித்தது.

இதற்கிடையில் புதிதாக 1880 நிரந்தர கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்களை தமிழக அரசு 2006–ம் ஆண்டு உருவாக்கியது. ஏற்கனவே தற்காலிகமாக பணியாற்றி வரும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய அரசு முடிவு செய்தது. இந்த தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தகுதி தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்கள் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி, சிறப்பு தகுதி தேர்வு 24.1.2010 அன்று நடைபெற்றது.

இந்த தேர்வில் பல கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளது என்று கூறி ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து, இந்த கேள்வித்தாளை சென்னை ஐ.ஐ.டி. நிபுணர் குழு ஆராய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த குழு கேள்விகளை ஆய்வு செய்து, மொத்தம் 150 கேள்விகளில் 20 கேள்விகள் தவறானவை என அறிக்கை அளித்தது.

இந்த அறிக்கையை பரிசீலித்த ஐகோர்ட்டு, தவறான 20 கேள்விகளை நீக்கிவிட்டு மீதமுள்ள 130 கேள்விகளுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்கி, அதில் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு 2010–ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மீண்டும் தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். அதில், ‘தவறான 20 கேள்விகளுக்கு விடை அளித்தவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் மறு தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து இந்த மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதில், ‘இந்த மறுஆய்வு மனுக்களில், மனுதாரர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். எனினும் இந்த வழக்கில் ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. எனவே, இந்த சூழலில் சீராய்வு மனு என்ற பெயரில் வழக்கு தொடர்பான எல்லா அம்சங்களையும் மீண்டும் விவாதிக்க இயலாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Tuesday, November 5, 2013

சற்றுமுன்: ஆசிரியர் தகுதித்தேர்வு ( TET PAPER 1 )முடிவு வெளியீடு.

TET Paper 1 Result -Click Here
.

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

சற்றுமுன்: ஆசிரியர் தகுதித்தேர்வு ( TET )முடிவு வெளியீடு.


கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியீடு. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன.இணையதளத்தில்
விரைவில் வெளியிடப்படும்.
http://www.kalviseithi.net/2013/11/blog-post_2657.html
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Sunday, October 27, 2013

ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!:

காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர்(Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 


1998ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தால் நிரப்பப்பட்ட தற்காலிக கணினி ஆசிரியர்களை தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய 2006ம் ஆண்டு தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. 

அதன்பிறகு 2008, 2010 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட கணினி ஆசிரியருக்கான சிறப்புத்தேர்வுகளில் முறையே 894, 125 மற்றும் 15 எண்ணிகையிலான ஆசிரியர்கள் மட்டும் 50% மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து 1440 தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து அவர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் கே.கே. சசிதரன் அவற்றை தள்ளுபடி செய்து, "தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சரியே" என கூறினர். மேலும் அவர்கள் கூறியதாவது:
"அந்த ஆசிரியர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்டு முறைகள் வாய்ப்பு வழங்கப்பட்ட போதும், அவர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சரியே. இருந்த போதும் அவர்களின் பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அவர்கள் முன்னே பெற்றிருந்த பதிவு மூப்புடன் சேர்க்கலாம். தற்போதைய அரசின் 
கொள்கைப்படி அவர்கள் ஆசிரியர் தேர்வு தகுதித் தேர்விலும் கலந்து கொள்ளலாம். அப்பொழுது வயது வரம்பை தளர்த்தக் கோரி அவர்கள் ஆசிரியர் தேறு வாரியத்தைக் கேட்டுக் கொள்ளலாம்."

மேலும் காலியாக உள்ள அந்த 1440 கம்ப்யூட்டர் டீச்சர் பணியிடங்கள் 31-1-2014க்குள் நிரப்பப்பட வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.

*இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் கணினி படித்தவாரக இருந்தால் நீங்கள் குறித்துக் கொள்ளவேண்டியது.
நீதிபதிகள் ஆசிரியர் நியமனம் பற்றி தெளிவாக கூறவில்லை.
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு மே 2014க்கு பிறகுதான் நடத்தப்படக் கூடும். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலோ பெரும்பாலான கணினி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை.
அடுத்த ஜனவரிக்குள் பணி நியமனம் முடிக்கப்பட வேண்டிய நிலையில் அதற்கு முன்பாக கணினி ஆசிரியர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு நடத்தப்படலாம் அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம்.


நன்றி: http://www.tamilagaasiriyar.com/2013/10/blog-post_2457.html
.


பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Tuesday, October 22, 2013

ஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளிகளில் பூட்டப்பட்ட கம்ப்யூட்டர் லேப்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 2,000த்துக்கும் மேற்பட்ட, அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஐ.டி., துறையின் மீதான மோகத்தில், மாணவ, மாணவியர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு படிக்க ஆர்வம் காட்டியதால், அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு துவக்கப்பட்டது. இதற்காக எல்காட் மூலம், கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கம்ப்யூட்டர் ஆசிரியர்களும், ஒப்பந்த அடிப்படையில், எல்காட் மூலமாகவே, நியமிக்கப்பட்டனர். 

இவர்களை நிரந்தர அரசுப் பணிக்கு மாற்றும் வகையில், சிறப்பு தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில், தேர்ச்சி பெறாதவர்களையும், சலுகை அடிப்படையில், நிரந்தரமாக்கி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், "தேர்ச்சி பெறாதவர்களை, உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்" என, உத்தரவிட்டது. அதனால், இரு மாதங்களுக்கு முன், 500க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 

அதன்பின், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிநியமனம் இதுவரை நடக்கவில்லை. இந்நிலையில், பல பள்ளிகளில், கம்ப்யூட்டர் லேப் பூட்டப்பட்டு, உபயோகிக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த உபகரணங்கள் வீணாவதுடன், மாணவ, மாணவியரின் கல்வித்தரமும் கேள்விக் குறியாகியுள்ளது.

இதுதொடர்பாக, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம், ஒரு பள்ளிக்கு ஒன்று என்ற விகிதத்தில் மட்டுமே இருந்தது. அதில், இருந்தவர்களும் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கம்ப்யூட்டர் மற்றும் அதுசார்ந்த உபகரணங்களை மாணவர்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க முடியாத நிலை உருவானது. வேறு ஆசிரியர்களும் பொறுப்பேற்க முடியாது என்பதால், கம்ப்யூட்டர் பாடம் நடத்துவதும், லேப் பயன்படுத்துவதும், பெரும்பாலான பள்ளிகளில் முடியாததாக உள்ளது. 

தற்காலிக ஆசிரியர்களை நம்பி, பல லட்சம் மதிப்பிலான லேபை ஒப்படைக்க முடியாது என்பதால், உடனடியாக கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி : தினமலர்
.
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Saturday, September 21, 2013

தோல்வியடைந்த கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் சரியே: ...

பாடசாலை: தோல்வியடைந்த கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் சரியே: ...:           "தேர்வில் தோல்வியடைந்த கணினி ஆசிரியர்களை, பணி நீக்கம் செய்தது சரியே; ஜனவரிக்குள், தேர்வு நடவடிக்கையை, பள்ளிக்கல்வித் துற... பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Tuesday, September 17, 2013

தமிழக பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில், வழக்கறிஞர்களின் வாதம் நேற்று முடிந்தது. மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தமிழ்நாடு, கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட, கோர்ட் அவமதிப்பு மனுவை, நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: கூடுதல் அட்வகேட் ஜெனரல், "652 காலியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப வேண்டும். முதலில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து, ஒன்றுக்கு ஐந்து என்கிற விகிதத்தில், 3,500 பேர் அடங்கிய பட்டியல் பெறப்பட வேண்டும். மாநிலம் முழுவதிலும் இருந்து பட்டியல் பெற, கணிசமான நேரம் தேவை. தேர்வு நடவடிக்கைகளை முடிக்க, ஆறு மாதம் வழங்க வேண்டும்' என்றார். தேர்வு நடவடிக்கைகளை உடனடியாக, அரசு துவங்க வேண்டும். இரண்டு மாதங்களில், கணிசமான பகுதியை முடிக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்குப் பின், வழக்கை பட்டியலிட வேண்டும். அதற்குள், நடவடிக்கை அறிக்கையை, பள்ளி கல்வித் துறையின், முதன்மை செயலர் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், கணினி ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை, நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. ஆசிரியர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சிலர், "புதிதாக, கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போது பணியில் இருப்பவர்களை தொடர அனுமதிக்க வேண்டும் என, தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதை பின்பற்றாமல், பணியில் இருந்து நீக்கி உள்ளனர்' என்றனர். பள்ளி கல்வித் துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "இரண்டு முறை வாய்ப்பு வழங்கியும், 50 சதவீத மதிப்பெண்களை, மனுதாரர்கள் பெறவில்லை. சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் தான், 652 பேர், பணி நீக்கம் செய்யப்பட்டனர்' என, கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு அரசு பிளீடர்கள் கிருஷ்ணகுமார், வேலுமணி ஆஜராகினர். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இவ்வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், "டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்தது.

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய