Thursday, January 27, 2011

வருங்கால கணினிகள் எப்படி இருக்கும்?

இவைகளை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ?

நல்லா பாருங்க... 


கேமரா பென்? , வெப் கேம் ?


என்னங்க தெரியலையா ?

இதுதான் அடுத்த தலைமுறை கணினி.நம்ப முடியலையா?
இந்த படத்தை பாருங்க ...


இந்த புரட்சிகரமான மற்றும் வித்தியசமான கணினியை 
ஆராய்ச்சியாளர்கள்
 உருவாக்கி உள்ளனர்.


BlueTooth அடிப்படையாகக்கொண்டு இக்கணினிகள் உருவாக்கப்பட்டுள்ளன


எல்லாம் ஒளிமயம்...(keyboard,monitor).நமது கணினிகளை வெகு விரைவில் , அடுத்ததலைமுறை கணினிகள் ஆட்கொள்ளும் என்றால் அது மிகையல்ல...



பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Wednesday, January 26, 2011

மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்


பல ஆண்டுகளாக மூளை எப்படி சிந்தின்கின்றது என்பது பற்றி  ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.இதன் நோக்கம் மூளையைபோல் சிந்திக்கும்  இயந்திரத்தை உருவாக்குவது.அதற்காக படிகளாக முதலில் எலியின் மூளையை போல் சிந்திக்ககூடிய சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றினை உருவாக்கினர்.

இவ்வரிசையில் பூனையின் மூளையை போல் சிந்திக்க கூடிய சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றை தற்போது IBM நிறுவனம் உருவாக்கி உள்ளது.இக்கணினி உருவாக்க பயன்படுத்தப்பட்ட Processor மொத்தம் 1,47,456 மற்றும் அதன் நினைவகம் 144 Terabyte (1Terabyte(TB) = 1024  GB))நாம் பயன்படுத்தும் கணினியை விட இலட்சம் மடங்கு சக்தி வாய்ந்தது இந்த சூப்பர் கம்ப்யூட்டர்.

இவ்வளவு சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர் பூனையின் மூளையை விட நூறு மடங்கு குறைவான வேகத்திலே யோசிக்கின்றது.ஆனாலும் இத்துறையில் பெரும் முன்னேற்றம் என்று கூறுகின்றனர்.இதற்கே இவ்வளவு சக்தி வாய்த்த கணினி என்றால், மனித மூளைக்கு நிகரான சிந்திக்கும் திறனை கொண்ட கணினியை உருவாக்குவது எவ்வளவு கடினம் என நினைத்து பாருங்கள்.இதுவரை 1% மட்டுமே மனித மூளையை போல சிந்திக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளது . ஆனாலும் ஒரு நாள் வரலாம்...


(மூளை  ஒரு சிக்கலான இணைப்பு அதிலுள்ள  நூறு  கோடி நியூரான்  மற்றும் அதை இணைக் கூடிய ஆயிரம் கோடி நரம்பு முனைகளையும் உள்ளடக்கியது .இதில் மூளையில் சிந்திக்கும் பகுதியை Cerebral Cortex என்று அழைகின்றனர். )

 நன்றி :  Times of India  ( http://gramathan.blogspot.com/2009/11/blog-post.html )
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Tuesday, January 25, 2011

GOOGLE மூலம் தமிழில் எளிமையாக டைப் செய்யலாம்

Google Indic –  இது ஒரு இந்திய மொழிகளை எழுத பயன்படும் கருவி (tool), இதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளை எளிதாக டைப் செய்யமுடியும். இது முழுக்க முழுக்க யுனிகோட் முறையை உபயோகிப்பதால் டைப் செய்யப்படும் வார்த்தைகளை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதுமட்டும் இல்லாது ஆங்கில கீபோர்ட் கொண்டே தமிழை சுலபமாகவும் மற்றும் எளிதாகவும் டைப் செய்ய முடிகிறது.
உதாரணமாக, தமிழ்நாடு என்று டைப் செய்வதற்கு tamilnadu அல்லது tamiznaduஎன்று டைப் செய்தால் போதும். Ctrl + G உபயோகிப்பதன் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிளை கலந்து எழுத முடியும். இதன் எடிட் ஆப்சன் மூலம் தவறாக டைப் செய்த எழுத்துக்களை சரி செய்துகொள்ளலாம், அதற்கு தவறாக எழுதிய வார்த்தையின்மேல் வைத்து இரு கிளிக்குகள் செய்தால் போதும். சரியான வார்த்தைகள் பட்டியலிடப்படும். நாம் தேவையான வார்த்தையின் மீது கிளிக் செய்தால் போதும்.
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Monday, January 24, 2011

பல PDF கோப்புகளை ஒன்றாக இணைத்து ஒரே PDF கோப்பாக உருவாக்கலாம்.

http://www.pdfmerge.com/

இந்த தளத்திற்கு சென்று எந்தெந்த PDF கோப்புகளை ஒன்றாக இணைக்க
வேண்டுமோ அவைகளை தேர்ந்தெடுத்துக்கொண்டு Merge என்பதை கிளிக் செய்தால் அந்த கோப்புகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே கோப்பாக தரவிறக்கம் செய்யப்படும்.                                                                                                              
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Sunday, January 23, 2011

PDF கோப்புகளுக்கு கடவுச்சொல் (PASSWORD) அமைத்திடலாம்

  
http://www.pdfprotect.net/

இந்த தளத்திற்கு சென்று எந்த PDF கோப்பிற்கு கடவுச்சொல் அமைக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு நாம் விரும்பும் கடவுச்சொல்லை கொடுத்து மீண்டும் ஒருமுறை கடவுச்சொல்லை கொடுத்து உறுதி செய்து கொண்டு Protect என்பதை கிளிக் செய்தால் அந்த கோப்பிற்கு கடவுச்சொல் அமைக்கப்பட்டு அந்த கோப்பானது தரவிறக்கம் செய்யப்படும். பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Saturday, January 22, 2011

Gmail லில் வருகின்ற மின்னஞ்சல்களை Word, PDF,Text, Html கோப்புகளாக சேமித்து வைக்க

  வழக்கமாக நமக்கு Gmail லில் வருகின்ற முக்கியமான மின்னஞ்சல்களை, ஆவணப் படுத்துவதற்காக வேர்டு கோப்புகளாக மாற்ற, மின்னஞ்சலில் உள்ள விவரங்களை தேர்வு செய்து, காப்பி செய்து பின்னர் வெற்று வேர்டு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்து சேமித்துக் கொள்வோம். 

இந்த பணியை மேலும் எளிதாக்க வந்துள்ளது Gmail Labs இன் Create a Document வசதி! இதனை நமது Gmail இல் இணைத்து எப்படி பயன் படுத்துவது என்பதை பார்க்கலாம்.

முதலில் உங்கள் Gmail கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புற மூலையில் உள்ள Settings லிங்கை க்ளிக் செய்து, Settings பக்கத்திற்கு செல்லுங்கள்.


இங்குள்ள வசதிகளில் Labs லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

இங்கு Available Labs பட்டியலில் உள்ள ஒவ்வொரு வசதியாக பார்த்து, Create a Document பகுதிக்கு சென்று அதிலுள்ள Enable பொத்தானை அழுத்துங்கள்.


பிறகு அந்த பக்கத்தின் இறுதிக்கு சென்று அங்குள்ள Save changes பொத்தானை க்ளிக் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். இனி தேவையான மின்னஞ்சலை திறக்கும் பொழுது, வலது புறத்தில் புதிய மெனு தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.






இதில் Create a Document லிங்கை க்ளிக் செய்தால், அடுத்த டேபில் Google Docs திறக்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் ஒரு Google டாக்குமெண்டாக உருவாக்கப்படும்.




அடுத்து மேலே உள்ள File menu விற்கு சென்று, Download as க்ளிக் செய்து,




ODT, PDF, RTF, Text, Word, Html என தேவையான கோப்பு வகையை க்ளிக் செய்து தரவிறக்கி வைத்துக் 
கொள்ளலாம்.



நன்றி:       http://suryakannan.blogspot.com/2010/11/gmail-tricks.html
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Thursday, January 20, 2011

செல்போன் எண்ணை மாற்றாமல் சேவையை மாற்றும் வசதி

செல்போன் எண்ணை மாற்றாமலே சேவை தரும் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் வசதி இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

ஏற்கெனவே சேவை பெறும் நிறுவனத்தில் நிலுவை ஏதும் இல்லாத வாடிக்கையாளர் தனது ப்ரீ-பெய்டு அல்லது போஸ்ட்-பெய்டு இணைப்பை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்.  எண் வாங்கி 90 நாள்கள் ஆகியிருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும்.
  இவ்வாறு நிறுவனத்தை மாற்றிக் கொள்வதற்குக் கட்டணம் உண்டு. ஆனால்  பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறிட விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது. இதுதவிர புதிய சிம் கார்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த 7 நாள்களில் புதிய நிறுவனத்தின் சேவை கிடைக்கும். அப்போது புதிய சிம் கார்டைப் பயன்படுத்த வேண்டும்.


வேறு மொபைல் நிறுவனத்துக்கு மாறுவது எப்படி?

  • செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்றுவதற்கு முதலில் UPC (Unique Porting Code) என்கிற எண்ணைப் பெறவேண்டும்.
  • அதைப் பெறுவதற்கு செல்போனில் இருந்து PORT <space> செல்போன் எண் என டைப் செய்து 1900 எனும் எண்ணுக்கு எஸ்எம்எஸ் (SMS) அனுப்ப வேண்டும். உதாரணம்: PORT 900000001
  • எட்டு இலக்க யுபிசி எண் கிடைக்கும். அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.
  • இந்த எண்ணை எடுத்துக் கொண்டு தாங்கள் விரும்பும் புதிய சேவை நிறுவன மையத்துக்குச் சென்று அங்கு தரப்படும் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பித் தர வேண்டும்.
  • இதன் பிறகு புதிய சேவை நிறுவனம் புதிய சிம் கார்டு வழங்கும். இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்கப்படலாம்.
  • அந்த சிம்கார்டு செயல்படத் துவங்கும் நேரத்தில் இருந்து புதிய நிறுவனத்தின் சேவை கிடைக்கும்.
குறிப்புகள்
  • சிடிஎம்ஏ, ஜிஎஸ்எம் ஆகிய இரு தொழில்நுட்பங்களில் எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வந்தாலும் மற்ற தொழில்நுட்பத்துக்கு மாறிக் கொள்ள முடியும்
  • அதேபோல் ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட் திட்டங்களுக்கு இடையேயும் மாறிக்கொள்ளும் வசதி உண்டு
  • இந்தச் சேவைக்கு கட்டணமாக புதிய சேவை நிறுவனம் அதிகபட்சமாக ரூ.19 வரை வசூலிக்கும். போட்டியின் காரணமாக இந்தக் கட்டணம் ரத்து செய்யப்படலாம்.
  • ஒரே தொலைத் தொடர்பு வட்டத்துக்குள் மட்டுமே செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்ற முடியும். அதாவது சென்னையில் உள்ள எண்ணை தில்லியில் உள்ள நிறுவனத்துக்கு மாற்ற முடியாது.

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Wednesday, January 19, 2011

PDFZilla-பிடிஎப் to Word, Text, Images , Html, Flash (இலவச மென்பொருள்- KEY யுடன்)

இந்த மென்பொருள் பிடிஎப் பைல் பார்மெட்டில் இருந்து Word, text,
images , HTML, Flash போன்ற பைல் பார்மெட்டுகளாக மாற்றிக்
கொள்ள முடியும். இந்த மென்பொருளின் விலை$29.95USD.
இதை பிப்ரவரி 5ம் தேதி வரை இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்
இலவச License KEY யுடன் .

மென்பொருளை இலவசமாக தரவிறக்க:

http://www.pdfzilla.com/giveaway.html

இதை இன்ஸ்டால் செய்து கொண்டு கொடுத்திருக்கும் Registration Code யைக்
கொண்டு பதிவு (Register)செய்து கொள்ள வேண்டும்.

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Monday, January 17, 2011

கூகுளின் தமிழ் அகராதி (GOOGLE -TAMIL DICTIONARY)








இந்த இணையதளத்திற்கு சென்று மேலே காட்டியபடி “English to <> Tamil ” என்பதை தேர்வு செய்யவும். அதன் பின் மொழி பெயர்க்க வேண்டிய வார்த்தையை  அடுத்த கட்டத்திற்குள் கொடுக்கவும்.
நாம் கொடுத்த ஆங்கில வார்த்தையைஎப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் ஆங்கில வார்த்தையை மொழிபெயர்த்து தமிழ் வார்த்தையாக வரிசைப்படுத்தி நமக்கு கொடுக்கும்.


பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Sunday, January 16, 2011

இணைய தளங்களை விளம்பரம் இல்லாமல் பார்க்க ஒரு இணையதளம்

சில இணையதளங்களுக்கு சென்றால் வரும் விளம்பரங்களை பார்க்க
பிடிக்கவில்லை எனில் உங்களுக்கென்று புதிதாக ஒரு வழி இருக்கிறது
எந்த இணைய தளங்களையும் விளம்பரம் இல்லாமல் பார்க்கலாம்.
http://adout.org
ஆன்லைன் -ல் நாம் எந்த தளத்தை விளம்பரம்
இல்லாமல் பார்க்க வேண்டுமோ அந்த இணையதள முகவரியை
மட்டும் இங்கு கொடுத்தால் போதும் .

http://adout.org



பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Saturday, January 15, 2011

2011ல் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ரோபோட்டில் உங்கள் பெயர் இடம் பெற

நாசாவிடம் இருந்து 2011 அக்டோபர் மாதம் செவ்வாய் கிரகத்தைப்
பற்றிஆராய்ச்சி செய்வதற்காக புதிய வகை ரோபோட் ஒன்று 
தயாராகிவருகிறது. இதில் இருக்கும் மைக்ரோ சிப் மூலம் நம்
 பெயரைபதிவு செய்து அதை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு 
சேர்க்கிறது.

நாசாவின் இணையதளத்திற்கு சென்று நாம் நம் பெயர், நாடு
மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் போன்றவை கொடுத்தால்
போதும் உடனடியாக இலவசமாக நம் பெயரை பதிவு செய்து
நமக்கு இதில் பங்கு பெற்றதற்கான சான்றிதழையும், சான்றிதழ்
எண்ணையும் கொடுத்து விடுகின்றனர். 
2011 அக்டோபர் மாதம் செவ்வாய்
கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக பல கோடி செலவு செய்து
தயாராகும் ரோபோட் நம் பெயரை செவ்வாய் கிரகம் வரை
கொண்டு செல்லும். . 

பதிவு செய்ய வேண்டிய முகவரி :

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Friday, January 14, 2011

பழுதான CD/DVD -ல் உள்ள தகவல்களை மீட்கலாம்

பழுதாகியுள்ள CD அல்லது DVD-யில் இருந்து தகவல்களை மீட்க
ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

இந்த மென்பொருளை கீழே உள்ள முகவரியில் தரவிறக்கிக்கொள்ளலாம்.
இந்த மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்து கொண்டு.
 DVD டிரைவில் பழுதான DVD – ஐ இட்டு இந்த மென்பொருளை
இயக்கியதும் அடுத்து Next என்ற பொத்தனை அழுத்தியவுடன்
 நாம் DVD-ல் உள்ள தகவல்களை நம் கணினியில் எங்கு சேமிக்க
வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக்கொண்டு Next என்ற பொத்தானை
அழுத்தவும் இப்போது உங்கள் DVD -ல் உள்ள
எந்தெந்த தகவல்களை சேமிக்க வேண்டுமோ அதை எல்லாம்
தனித்தனியாகவோ அல்லது  மொத்தமாகவோ தேர்ந்தெடுத்துக்கொண்டு
Next என்ற பொத்தனை அழுத்தியவுடன் சிறிது நேரத்தில் நம் அனைத்து
தகவல்களும் பழுதான DVD -ல் இருந்து நம் கணினியில் சேமிக்கப்பட்டு
விட்டது என்ற செய்தி வரும்.
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

குறுஞ்செய்திகளை(SMS) மேலும் சுருக்கி அனுப்பலாம்

குறுஞ்செய்திகளை(SMS)  மேலும் சுருக்கி அனுப்ப ஒரு தளம் உள்ளது.
 http://www.transl8it.com
 இந்தத்தளத்திற்கு சென்று நம் குறுஞ்செய்தியை தட்டச்சு செய்ய வேண்டும்.
தட்டச்சு செய்து முடித்ததும் transl8it! என்ற பொத்தானை அழுத்தவும்.
சில நொடிகளில் நாம் கொடுத்த குறுஞ்செய்தி மேலும் சுருக்கப்பட்டுஇருக்கும்.
இந்த தளத்தில் இலவசமாக ஒருகணக்கு உருவாக்கி கொண்டு இந்த 
குறுஞ்செய்தியை அலைபேசிக்குSMS ஆக அனுப்பலாம்.
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Thursday, January 13, 2011

இணையத்தின் மூலம் இலவசமாக குறுஞ்செய்தி(SMS) அனுப்பலாம்.

இணையத்தின் மூலம் கீழ்க்கண்ட தளத்தில் இருந்து இந்தியா முழுவதும் இலவசமாக குறுஞ்செய்தி (SMS)அனுப்பலாம். இந்த தளத்தில் நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 25 மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தி (SMS)அனுப்பலாம்.

http://www.way2sms.com/

இணையத்தின் மூலம் கீழ்க்கண்ட தளத்தில் இருந்து இந்தியா முழுவதும் & சில வெளிநாடுகளுக்கும் இலவசமாக குறுஞ்செய்தி(SMS) அனுப்பலாம். இந்த தளத்தில் நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 100 மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தி(SMS) அனுப்பலாம்.

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Old Version மென்பொருட்கள் அனைத்தும் ஒரே தளத்தில்

 சில சமயங்களில் நமக்கு பழையவெர்சன் மென்பொருள்கள்
 சிறப்பாக இருக்கும். அந்த வகையில் பழைய வெர்சன் ( Old version)
Software எங்கு தேடினாலும் சில சமயங்களில் கிடைப்பதில்லை.
இப்படி நாம் விரும்பும்பழைய வெர்சன் மென்பொருளை
 கீழ்க்கண்ட தளத்தில் இருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.
இணையதள முகவரி http://www.oldversion.com

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

இலவச மென்பொருட்கள்

நம் கணினிக்கு தேவையான பல மென்பொருட்களை கீழே உள்ள தளங்களில் இருந்து முற்றிலும் இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம்.


தளமுகவரிகள் :


http://www.winaddons.com/top-300-freeware-software/


 http://www.filehippo.com/


http://www.download3000.com/


http://www.downloadatoz.com/


http://www.soft32.com/


http://www.freedownloadscenter.com/


http://www.dl4all.com.

http://www.downloadatoz.com/

http://downloads.zdnet.com/

http://download.cnet.com

http://www.softpedia.com/ பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

PDF கோப்புகளை எக்செல் கோப்பாக மாற்ற

பிடிஎப் டாக்குமெண்ட்-ஐ சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் எக்செல்
ஆக மாற்ற தளம் உள்ளது.எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை
இணையதள முகவரி : http://www.pdftoexcelonline.com
.

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Wednesday, January 12, 2011

அனைத்து வகையான வன்பொருட்களுக்கும் (Hardware) டிரைவர் மென்பொருள் ( Software) ஒரே தளத்தில்

நம் கணினியில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான நிறுவனத்தின் அனைத்து வகையான வன்பொருட்களுக்கும் (Hardware)டிரைவர் மென்பொருள் ஒரே இடத்தில் இருந்து தரவிறக்கலாம்



இணையதள முகவரி :  http://www.nodevice.com

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

அடோப் ரீடரின் புதிய பதிப்பு அடோப் ரீடர் X

புதிய அடோப் ரீடர் X ஆனது, மேலும் பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, . இந்த அடோப் ரீடர் மூலமாக நாம் இதுநாள் வரை pdf பைல்களை பார்க்க மட்டுமே முடிந்தது ஆனால் இந்த அடோப் ரீடர் X மூலமாக pdf பைல்களை உருவாக்கவும் முடியும் . .


மென்பொருளை தரவிறக்கம் செய்ய:




பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Tuesday, January 11, 2011

முகவரிகளை கண்டறிய உதவும் ஒரு இணையதளம்

இந்த தளத்தின் மூலம் நாம் மொபைல் நம்பர் Trace-ல் தொடங்கி, வாகன பதிவு எண், தொலைபேசி, பின் கோடு, IP அட்ரஸ் , STD code   என நீண்டுகொண்டே செல்கிறது.

தளத்தின் முகவரி: http://www.indiatrace.com/index.php






பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

கணினியின் அனைத்து மென்பொருள்களின் ஷார்ட்கட் (Shortcut Keys )

கணினியில் நாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் Shortcut 
Keys அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து படித்து நம்
 நேரத்தை மிச்சப்படுத்தாலாம் .



இணையதள முகவரி : http://www.shortcutworld.com

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

வெளிநாடுகளுக்கு இணையம் மூலம் இலவசமாக பேக்ஸ்(FAX) அனுப்பலாம்.

இப்போது வெளிநாட்டில் இருக்கும் நண்பருக்கோ அல்லது
நிறுவனத்திற்கோ பேக்ஸ் அனுப்ப வேண்டும் என்றால் எந்தவித
பணச்செலவும் இல்லாமல் இலவசமாக நம் இணையம் மூலமே
அனுப்பலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.

இந்ததளத்தின் மூலம் நாம் பேக்ஸ் அனுப்ப எந்த பயனாளர் 
கணக்கும் தேவையில்லை
இணையதள முகவரி : http://www.myfax.com/free/sendfax.aspx

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Monday, January 10, 2011

உங்களுடைய ஜிமெயில் முகவரியை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா?

  நீங்கள் முதலில் உங்களுடைய ஜிமெயில் முகவரியில் நுழைந்து கொண்டு கடைசியாக அடிபகுதியில் உள்ள Details என்பதை கிளிக் செய்யவும்.


கிளிக் செய்தவுடன் ஒரு விண்டோ தோன்றும் அதில் நீங்கள் கடைசியாக எப்போதெல்லாம் ஜிமெயில் அக்கவுண்டை ஒப்பன் செய்தீர்களோ அந்த நேரம் மற்றும் IP முகவரிகள் அனைத்தும் பட்டியலிடப்படும் அதில் நீங்கள் ஒப்பன் செய்யாத IP முகவரி இருந்தால் உடனே அதற்கு மேலே பாருங்கள் உங்கள் ஈ-மெயிலானது தற்போது வேறு எங்காவது ஓப்பன் செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரத்தை காட்டும்.

உடனே Sign out all other sessions என்பதை கிளிக் செய்து மற்ற இடத்தில் ஒப்பன் செய்யப்பட்டிருந்த உங்களுடைய ஈ-மெயிலை Sign out  செய்ய முடியும்.உடனே உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளவும்.


பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Sunday, January 9, 2011

இலவசமாக PDF File உருவாக்கும் மென்பொருள்

கீழே உள்ள இந்த இணைய தளத்திற்கு சென்றுஇந்த மென்பொருளை
இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.


இன்ஸ்டால் செய்து முடிந்த உடன் நீங்கள் MS Word, Excel, Power Point
 எதில் வேண்டுமானாலும் உங்களுக்கு தேவையான விபரங்களை
டைப் செய்துகொண்டு அதனை PDF பைலாக மாற்ற கீழே காண்பது
போல பிரிண்ட் ஆப்சனுக்கு (File > Print) சென்று பிரிண்டர் பெயரில்
 doPDF v7 என்பது தேர்வு செய்யப்பட்டுள்ளதா என பார்த்துக்கொண்டு
ஓகே செய்தால் உங்களுக்கு நீங்கள் டைப் செய்து வைத்த விபரங்கள்
 ஒரு PDF பைலாக கிடைத்துவிடும்.











பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

கூகுள் தரும் புதிய வசதி - Google Scribe

இந்த வசதியினைப் பெற நாம் முதலில் இணைய இணைப்பில் இந்த  தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் நாம் டைப் செய்யத் தொடங்கிய வுடனேயே இந்த சொல் இதுவாக இருக்கலாம் எனப் பல சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. நாம் தொடர்ந்து டைப் செய்திடலாம்;அல்லது நாம் டைப் செய்திட விரும்பும் சொல் இருப்பின், கர்சரை நகர்த்தாமல், அதன் எதிரே இருக்கும் எண்ணுக்கான கீயை அழுத்தினால் போதும். அந்த சொல் அமைக்கப்படுகிறது. அடுத்து, அடுத்த சொல் டைப் செய்திடுகையில், நீங்கள் அமைக்க இருக்கும் வாக்கியம் என்னவாக இருக்கும் என்று உணர்ந்து, மீண்டும் அடுத்த சொற்களைத் தருகிறது.இதனால், நமக்கு எழுத்துப் பிழை இல்லாமல் சொற்கள் கிடைக்கின்றன. அடுத்து ஆங்கிலத்தில் நல்ல சரியான சொற்கள் நம் எண்ணத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் தரப்படுகின்றன. இதில் அனைத்து பிரிவுகளுக்கும் சொற்கள் கிடைக் கின்றன.

http://scribe.googlelabs.com/
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

ஆவணங்களை விரும்பிய வகைக்கு மாற்ற உதவும் மென்பொருள்

இந்த மென்பொருள் மூலம் Pdf, doc, docx, txt, htm, rtf போன்ற முக்கிய ஆவண வடிவங்களிலிருந்து மேற்கண்ட வகைகளில் ஒன்றினுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

இதில் வேண்டிய கோப்புகளை தேர்வு செய்து விட்டு என்ன வகைக்கு ( Output type) மாற்ற வேண்டும் என்பதையும் எங்கே சேமிக்கப்பட வேண்டும் (Output folder ) என்பதையும் தேர்வு செய்து விட்டு Convert பட்டனை கிளிக் செய்தால் போதும்.

இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளங்குகளில் மட்டுமே செயல்படும்.
தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
http://www.softinterface.com/Convert-Doc/Convert-Doc.htm
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய