Tuesday, January 25, 2011

GOOGLE மூலம் தமிழில் எளிமையாக டைப் செய்யலாம்

Google Indic –  இது ஒரு இந்திய மொழிகளை எழுத பயன்படும் கருவி (tool), இதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளை எளிதாக டைப் செய்யமுடியும். இது முழுக்க முழுக்க யுனிகோட் முறையை உபயோகிப்பதால் டைப் செய்யப்படும் வார்த்தைகளை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதுமட்டும் இல்லாது ஆங்கில கீபோர்ட் கொண்டே தமிழை சுலபமாகவும் மற்றும் எளிதாகவும் டைப் செய்ய முடிகிறது.
உதாரணமாக, தமிழ்நாடு என்று டைப் செய்வதற்கு tamilnadu அல்லது tamiznaduஎன்று டைப் செய்தால் போதும். Ctrl + G உபயோகிப்பதன் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிளை கலந்து எழுத முடியும். இதன் எடிட் ஆப்சன் மூலம் தவறாக டைப் செய்த எழுத்துக்களை சரி செய்துகொள்ளலாம், அதற்கு தவறாக எழுதிய வார்த்தையின்மேல் வைத்து இரு கிளிக்குகள் செய்தால் போதும். சரியான வார்த்தைகள் பட்டியலிடப்படும். நாம் தேவையான வார்த்தையின் மீது கிளிக் செய்தால் போதும்.
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

No comments:

Post a Comment