Monday, February 28, 2011

ஆன்லைன் மூலம் புரோகிராம் எழுதிப்பழகலாம்

கணினியில் புரோகிராம் எழுதிப்படிக்கும் ஆர்வம் உங்களிடம்
இருக்கிறது ஆனால் அதற்கான மென்பொருள் எங்கே கிடைக்கும்,
நாம் பயன்படுத்தும் அத்தனை மென்பொருள்களும் கணினியில் இருக்குமா ? இப்படி
நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதிலாக ஒரு தளம் வந்துள்ளது,
ஆன்லைன் மூலம் நாம் எங்கு இருந்து வேண்டுமானாலும்
புரோகிராம் எழுதிப்பழகலாம்

கணினி புரோகிராம் துறையில் இப்ப தான் நுழைகிறேன், எனக்கு
புரோகிராம் எப்படி Run செய்து பார்க்க வேண்டும் என்று கூட தெரியாது,
சொந்தமாக என்னிடம் கணினி கிடையாது இப்படி பல கேள்விகளுக்கு
தீர்வாக வந்துள்ள இத்தளம் மூலம் C புரோகிராம் முதல் Php புரோகிராம்
வரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் இயக்கிப்பார்க்கலாம்.

இணையதள முகவரி :

இந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த மொழியில் புரோகிராம் எழுத
வேண்டுமோ அந்த மொழியை இடதுபக்கம் இருக்கும் Choose Language
என்பதில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அடுத்து படம் 1-ல்
காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் நம் புரோகிராமை எழுதிவிட்டு
Run code என்ற ஆப்சனையும் தேர்ந்தெடுத்துவிட்டு Submit என்ற
பொத்தானை அழுத்தினால் போதும் அடுத்து வரும் திரையில்
நாம் எழுதிய புரோகிராம்-க்கான Output கிடைக்கும்.கணினித்துறையில்
புரோகிராம் எழுத நினைக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி : http://winmani.wordpress.com
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Friday, February 25, 2011

Google Chrome மூலம் PDF Reader இல்லாமல் PDF பைல்களை OPEN செய்யலாம்

நாம் ஒரு சில சமயங்களில், நண்பர்களுடைய கணினி அல்லது அலுவலக கணினியை அவசரத்திற்கு பயன்படுத்தும் பொழுது, அவற்றில் PDF Reader நிறுவப்படாமல் இருக்கலாம். (கூகிள் குரோம் உலாவி நிறுவப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம்) உங்களிடம் உள்ள PDF கோப்பை உடனடியாக திறந்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த வகை கோப்புகளை திறப்பதற்கான மாற்று வழியை கூகிள் குரோம் உலாவி நமக்கு அளிக்கிறது.

தேவையான PDF கோப்பை வலது க்ளிக் செய்து திறக்கும் context menu வில் Open with ஐ க்ளிக் செய்யுங்கள். ஒருவேளை Open with வசதி வரவில்லையெனில் shift மற்றும் மெளசின் வலது பொத்தானை க்ளிக் செய்யலாம்.

இந்த Open with பகுதியில் Google Chrome பட்டியலிடப்படவில்லை எனில், Choose program ஐ க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Open with உரையாடல் பெட்டியில் , Browse பொத்தானை அழுத்தி, Google Chrome உலாவி உங்கள் கணினியில் எங்கு நிறுவப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால் அந்த பகுதியை browse செய்து கொடுக்கலாம்.

ஆனால் Google Chrome உலாவி Program Files கோப்புறைக்குள் நிருவப்படுவதில்லை. எனவே இது நிறுவப்பட்ட பகுதியை தேர்வு செய்ய, Google Chrome உலாவியின் shortcut ஐ வலது க்ளிக் செய்து, properties க்ளிக் செய்து, திறக்கும் உரையாடல் பெட்டியில், அதில் Target பகுதிக்கு நேராக உள்ள லொகேஷனை காப்பி செய்து, பேஸ்ட் செய்தால் போதுமானது.

இனி உங்களுக்கு தேவையான PDF கோப்பு உங்கள் அபிமான குரோம் உலாவியில் திறக்கும்.

நன்றி :http://suryakannan.blogspot.com/
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Sunday, February 6, 2011

Video வை convert செய்ய ஒரு இலவச மென்பொருள்

http://videoconverter.hamstersoft.com/

மேற்கண்ட இணையதள முகவரியை கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கிக் கொண்டு பின் அதை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்னர் Add file என்பதை கிளிக் செய்து கொண்டு எந்த File ஐ convert  செய்ய வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு பின் Edit என்பதை கிளிக் செய்து எந்த Format க்கு மாற்ற வேண்டுமோ அந்த Format ஐ Select செய்து கொண்டு Convert ஐ கிளிக் செய்ய வேண்டும்.எந்த இடத்தில் அந்த File ஐ சேமிக்க வேண்டும் என்பதையும் நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Saturday, February 5, 2011

ஆன்லைனில் ICICI அல்லது SBI அக்கௌன்ட் வைத்திருப்பவர்களே உஷார்!

ஆன்லைனில் ICICI அல்லது SBI அக்கௌன்ட் வைத்திருப்பவர்களா நீங்கள் இருந்தால் கீழே கொடுத்துள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
1. உண்மையான ICICI BANK தள முகவரி https://www  என்று ஆரம்பிக்கும் இது தான் சரியானது.

2. அதற்கு மாறாக http://www  என்று ஆரம்பித்தால் போலி இணைய தளம். இதில் நீங்கள் எந்த தகவலும் தர வேண்டாம்.

3. padlock icon  அந்த தளத்தில் உள்ளதா என்று உறுதி படுத்தி கொள்ளவும். இந்த icon ஒரு பூட்டு வடிவத்தில் காணப்படும். 

கீழே உள்ள படங்களை பார்த்து உறுதி படுத்தி கொள்ளுங்கள்.


இதையெல்லாம் உறுதி படுத்தி கொண்டு உங்கள் ஆன்லைன் சேவையை பாதுகாப்பாக தொடருங்கள்:

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Friday, February 4, 2011

பிரிண்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் உதவும் இலவச Printable Paper

புதிதாக பிரிண்டர் வாங்கி இருப்பவர்களுக்கும் ஏற்கனவே பிரிண்டர்
வைத்திருப்பவர்களுக்கும் உதவுவதற்காக அனைத்துவிதமான இலவச
பிரிண்டபிள் பேப்பர் உள்ளது 



ஆபிஸ் டாக்குமெண்ட் Template பிரிண்ட் எடுக்க வேண்டும் எங்கு
தரவிரக்கலாம் என்று ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம்,
கிராப் முதல் இரட்டை கோடு நோட்டு பக்கம் வரை அனைத்தையும்
எளிதாக பிரிண்ட் செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :  http://www.printablepaper.net
கிரிக்கெட் ஸ்கோர் முதல் மாத பட்ஜெட் வரை அனைத்திற்கும்
உள்ள Template இந்ததளத்தில் இலவசமாகவே கிடைக்கிறது
இதை தரவிறக்கி பிரிண்ட் செய்து உடனடியாக பயன்படுத்தலாம்.
பெயிண்ட் அல்லது போட்டோஷாப்-ல் சென்று ஒவ்வொரு
கோடாக போட்டு அதை நம் பிரிண்டருக்கு தகுந்தாற் போல்
சோதனை செய்வதற்குள் நமக்கு பிரிண்ட் செய்யும் ஆசையே
வெறுத்துவிடும் இதற்காகத்தான் இந்ததளம் நமக்கு அனைத்து
துறைகள் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட் Template -ஐ இலவசமாக
கொடுக்கிறது. 
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய