Sunday, March 24, 2013

சர்வதேச சிம் கார்டு அறிமுகம்


மும்பை -22 March 2013
வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் பயணிகளுக்கு உதவும் வகையில் சர்வதேச சிம் கார்டு மும்பையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹாட்மெயில் இ-மெயிலை உருவாக்கிய சபீர் பாட்டியாவின் கூட்டு முயற்சி இந்த ஜாக்ஸ்டர் சிம் கார்டு. இது குறித்து அவர் கூறியது: ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி இருபது லட்சம் பேர் இந்தியா வந்து செல்கின்றனர். இதில் 86 சதவீதம் பேர் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். சர்வதேச ரோமிங் கட்டணம் மிக அதிகமாக உள்ள நிலையில், ஜாக்ஸ்டர் சிம் கார்டு இந்த வகை பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதன் விலை ரூ. 600. தற்போது சந்தையில் விற்பனையாகும் சர்வதேச சிம் கார்டுகளை நோக்கும்போது இது 70 சதவீதம் விலை குறைந்தது. அமெரிக்கா, கானடா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய இடங்களில் இதனை உள்ளூர் எண் கொண்டு உள்ளூர் அழைப்புகளுக்கும் சர்வதேச அழைப்புகளுக்கும் பயன்படுத்தலாம்.
உலகின் பிற நாடுகளில் மேலும் குறைந்த அழைப்புக் கட்டணத்துக்கு இந்த சிம் கார்டைப் பயன்படுத்தலாம். அடுத்த இரு ஆண்டுகளில் பத்து லட்சம் சிம் கார்டுகளை விற்க திட்டமிட்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய