Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

Thursday, January 27, 2011

வருங்கால கணினிகள் எப்படி இருக்கும்?

இவைகளை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ?

நல்லா பாருங்க... 


கேமரா பென்? , வெப் கேம் ?


என்னங்க தெரியலையா ?

இதுதான் அடுத்த தலைமுறை கணினி.நம்ப முடியலையா?
இந்த படத்தை பாருங்க ...


இந்த புரட்சிகரமான மற்றும் வித்தியசமான கணினியை 
ஆராய்ச்சியாளர்கள்
 உருவாக்கி உள்ளனர்.


BlueTooth அடிப்படையாகக்கொண்டு இக்கணினிகள் உருவாக்கப்பட்டுள்ளன


எல்லாம் ஒளிமயம்...(keyboard,monitor).நமது கணினிகளை வெகு விரைவில் , அடுத்ததலைமுறை கணினிகள் ஆட்கொள்ளும் என்றால் அது மிகையல்ல...



பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Wednesday, January 26, 2011

மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்


பல ஆண்டுகளாக மூளை எப்படி சிந்தின்கின்றது என்பது பற்றி  ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.இதன் நோக்கம் மூளையைபோல் சிந்திக்கும்  இயந்திரத்தை உருவாக்குவது.அதற்காக படிகளாக முதலில் எலியின் மூளையை போல் சிந்திக்ககூடிய சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றினை உருவாக்கினர்.

இவ்வரிசையில் பூனையின் மூளையை போல் சிந்திக்க கூடிய சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றை தற்போது IBM நிறுவனம் உருவாக்கி உள்ளது.இக்கணினி உருவாக்க பயன்படுத்தப்பட்ட Processor மொத்தம் 1,47,456 மற்றும் அதன் நினைவகம் 144 Terabyte (1Terabyte(TB) = 1024  GB))நாம் பயன்படுத்தும் கணினியை விட இலட்சம் மடங்கு சக்தி வாய்ந்தது இந்த சூப்பர் கம்ப்யூட்டர்.

இவ்வளவு சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர் பூனையின் மூளையை விட நூறு மடங்கு குறைவான வேகத்திலே யோசிக்கின்றது.ஆனாலும் இத்துறையில் பெரும் முன்னேற்றம் என்று கூறுகின்றனர்.இதற்கே இவ்வளவு சக்தி வாய்த்த கணினி என்றால், மனித மூளைக்கு நிகரான சிந்திக்கும் திறனை கொண்ட கணினியை உருவாக்குவது எவ்வளவு கடினம் என நினைத்து பாருங்கள்.இதுவரை 1% மட்டுமே மனித மூளையை போல சிந்திக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளது . ஆனாலும் ஒரு நாள் வரலாம்...


(மூளை  ஒரு சிக்கலான இணைப்பு அதிலுள்ள  நூறு  கோடி நியூரான்  மற்றும் அதை இணைக் கூடிய ஆயிரம் கோடி நரம்பு முனைகளையும் உள்ளடக்கியது .இதில் மூளையில் சிந்திக்கும் பகுதியை Cerebral Cortex என்று அழைகின்றனர். )

 நன்றி :  Times of India  ( http://gramathan.blogspot.com/2009/11/blog-post.html )
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Tuesday, January 25, 2011

GOOGLE மூலம் தமிழில் எளிமையாக டைப் செய்யலாம்

Google Indic –  இது ஒரு இந்திய மொழிகளை எழுத பயன்படும் கருவி (tool), இதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளை எளிதாக டைப் செய்யமுடியும். இது முழுக்க முழுக்க யுனிகோட் முறையை உபயோகிப்பதால் டைப் செய்யப்படும் வார்த்தைகளை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதுமட்டும் இல்லாது ஆங்கில கீபோர்ட் கொண்டே தமிழை சுலபமாகவும் மற்றும் எளிதாகவும் டைப் செய்ய முடிகிறது.
உதாரணமாக, தமிழ்நாடு என்று டைப் செய்வதற்கு tamilnadu அல்லது tamiznaduஎன்று டைப் செய்தால் போதும். Ctrl + G உபயோகிப்பதன் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிளை கலந்து எழுத முடியும். இதன் எடிட் ஆப்சன் மூலம் தவறாக டைப் செய்த எழுத்துக்களை சரி செய்துகொள்ளலாம், அதற்கு தவறாக எழுதிய வார்த்தையின்மேல் வைத்து இரு கிளிக்குகள் செய்தால் போதும். சரியான வார்த்தைகள் பட்டியலிடப்படும். நாம் தேவையான வார்த்தையின் மீது கிளிக் செய்தால் போதும்.
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Monday, January 24, 2011

பல PDF கோப்புகளை ஒன்றாக இணைத்து ஒரே PDF கோப்பாக உருவாக்கலாம்.

http://www.pdfmerge.com/

இந்த தளத்திற்கு சென்று எந்தெந்த PDF கோப்புகளை ஒன்றாக இணைக்க
வேண்டுமோ அவைகளை தேர்ந்தெடுத்துக்கொண்டு Merge என்பதை கிளிக் செய்தால் அந்த கோப்புகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே கோப்பாக தரவிறக்கம் செய்யப்படும்.                                                                                                              
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Sunday, January 23, 2011

PDF கோப்புகளுக்கு கடவுச்சொல் (PASSWORD) அமைத்திடலாம்

  
http://www.pdfprotect.net/

இந்த தளத்திற்கு சென்று எந்த PDF கோப்பிற்கு கடவுச்சொல் அமைக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு நாம் விரும்பும் கடவுச்சொல்லை கொடுத்து மீண்டும் ஒருமுறை கடவுச்சொல்லை கொடுத்து உறுதி செய்து கொண்டு Protect என்பதை கிளிக் செய்தால் அந்த கோப்பிற்கு கடவுச்சொல் அமைக்கப்பட்டு அந்த கோப்பானது தரவிறக்கம் செய்யப்படும். பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Saturday, January 22, 2011

Gmail லில் வருகின்ற மின்னஞ்சல்களை Word, PDF,Text, Html கோப்புகளாக சேமித்து வைக்க

  வழக்கமாக நமக்கு Gmail லில் வருகின்ற முக்கியமான மின்னஞ்சல்களை, ஆவணப் படுத்துவதற்காக வேர்டு கோப்புகளாக மாற்ற, மின்னஞ்சலில் உள்ள விவரங்களை தேர்வு செய்து, காப்பி செய்து பின்னர் வெற்று வேர்டு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்து சேமித்துக் கொள்வோம். 

இந்த பணியை மேலும் எளிதாக்க வந்துள்ளது Gmail Labs இன் Create a Document வசதி! இதனை நமது Gmail இல் இணைத்து எப்படி பயன் படுத்துவது என்பதை பார்க்கலாம்.

முதலில் உங்கள் Gmail கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புற மூலையில் உள்ள Settings லிங்கை க்ளிக் செய்து, Settings பக்கத்திற்கு செல்லுங்கள்.


இங்குள்ள வசதிகளில் Labs லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

இங்கு Available Labs பட்டியலில் உள்ள ஒவ்வொரு வசதியாக பார்த்து, Create a Document பகுதிக்கு சென்று அதிலுள்ள Enable பொத்தானை அழுத்துங்கள்.


பிறகு அந்த பக்கத்தின் இறுதிக்கு சென்று அங்குள்ள Save changes பொத்தானை க்ளிக் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். இனி தேவையான மின்னஞ்சலை திறக்கும் பொழுது, வலது புறத்தில் புதிய மெனு தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.






இதில் Create a Document லிங்கை க்ளிக் செய்தால், அடுத்த டேபில் Google Docs திறக்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் ஒரு Google டாக்குமெண்டாக உருவாக்கப்படும்.




அடுத்து மேலே உள்ள File menu விற்கு சென்று, Download as க்ளிக் செய்து,




ODT, PDF, RTF, Text, Word, Html என தேவையான கோப்பு வகையை க்ளிக் செய்து தரவிறக்கி வைத்துக் 
கொள்ளலாம்.



நன்றி:       http://suryakannan.blogspot.com/2010/11/gmail-tricks.html
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Sunday, January 16, 2011

இணைய தளங்களை விளம்பரம் இல்லாமல் பார்க்க ஒரு இணையதளம்

சில இணையதளங்களுக்கு சென்றால் வரும் விளம்பரங்களை பார்க்க
பிடிக்கவில்லை எனில் உங்களுக்கென்று புதிதாக ஒரு வழி இருக்கிறது
எந்த இணைய தளங்களையும் விளம்பரம் இல்லாமல் பார்க்கலாம்.
http://adout.org
ஆன்லைன் -ல் நாம் எந்த தளத்தை விளம்பரம்
இல்லாமல் பார்க்க வேண்டுமோ அந்த இணையதள முகவரியை
மட்டும் இங்கு கொடுத்தால் போதும் .

http://adout.org



பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Saturday, January 15, 2011

2011ல் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ரோபோட்டில் உங்கள் பெயர் இடம் பெற

நாசாவிடம் இருந்து 2011 அக்டோபர் மாதம் செவ்வாய் கிரகத்தைப்
பற்றிஆராய்ச்சி செய்வதற்காக புதிய வகை ரோபோட் ஒன்று 
தயாராகிவருகிறது. இதில் இருக்கும் மைக்ரோ சிப் மூலம் நம்
 பெயரைபதிவு செய்து அதை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு 
சேர்க்கிறது.

நாசாவின் இணையதளத்திற்கு சென்று நாம் நம் பெயர், நாடு
மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் போன்றவை கொடுத்தால்
போதும் உடனடியாக இலவசமாக நம் பெயரை பதிவு செய்து
நமக்கு இதில் பங்கு பெற்றதற்கான சான்றிதழையும், சான்றிதழ்
எண்ணையும் கொடுத்து விடுகின்றனர். 
2011 அக்டோபர் மாதம் செவ்வாய்
கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக பல கோடி செலவு செய்து
தயாராகும் ரோபோட் நம் பெயரை செவ்வாய் கிரகம் வரை
கொண்டு செல்லும். . 

பதிவு செய்ய வேண்டிய முகவரி :

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Friday, January 14, 2011

குறுஞ்செய்திகளை(SMS) மேலும் சுருக்கி அனுப்பலாம்

குறுஞ்செய்திகளை(SMS)  மேலும் சுருக்கி அனுப்ப ஒரு தளம் உள்ளது.
 http://www.transl8it.com
 இந்தத்தளத்திற்கு சென்று நம் குறுஞ்செய்தியை தட்டச்சு செய்ய வேண்டும்.
தட்டச்சு செய்து முடித்ததும் transl8it! என்ற பொத்தானை அழுத்தவும்.
சில நொடிகளில் நாம் கொடுத்த குறுஞ்செய்தி மேலும் சுருக்கப்பட்டுஇருக்கும்.
இந்த தளத்தில் இலவசமாக ஒருகணக்கு உருவாக்கி கொண்டு இந்த 
குறுஞ்செய்தியை அலைபேசிக்குSMS ஆக அனுப்பலாம்.
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Thursday, January 13, 2011

இணையத்தின் மூலம் இலவசமாக குறுஞ்செய்தி(SMS) அனுப்பலாம்.

இணையத்தின் மூலம் கீழ்க்கண்ட தளத்தில் இருந்து இந்தியா முழுவதும் இலவசமாக குறுஞ்செய்தி (SMS)அனுப்பலாம். இந்த தளத்தில் நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 25 மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தி (SMS)அனுப்பலாம்.

http://www.way2sms.com/

இணையத்தின் மூலம் கீழ்க்கண்ட தளத்தில் இருந்து இந்தியா முழுவதும் & சில வெளிநாடுகளுக்கும் இலவசமாக குறுஞ்செய்தி(SMS) அனுப்பலாம். இந்த தளத்தில் நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 100 மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தி(SMS) அனுப்பலாம்.

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

PDF கோப்புகளை எக்செல் கோப்பாக மாற்ற

பிடிஎப் டாக்குமெண்ட்-ஐ சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் எக்செல்
ஆக மாற்ற தளம் உள்ளது.எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை
இணையதள முகவரி : http://www.pdftoexcelonline.com
.

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Tuesday, January 11, 2011

முகவரிகளை கண்டறிய உதவும் ஒரு இணையதளம்

இந்த தளத்தின் மூலம் நாம் மொபைல் நம்பர் Trace-ல் தொடங்கி, வாகன பதிவு எண், தொலைபேசி, பின் கோடு, IP அட்ரஸ் , STD code   என நீண்டுகொண்டே செல்கிறது.

தளத்தின் முகவரி: http://www.indiatrace.com/index.php






பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

கணினியின் அனைத்து மென்பொருள்களின் ஷார்ட்கட் (Shortcut Keys )

கணினியில் நாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் Shortcut 
Keys அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து படித்து நம்
 நேரத்தை மிச்சப்படுத்தாலாம் .



இணையதள முகவரி : http://www.shortcutworld.com

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

வெளிநாடுகளுக்கு இணையம் மூலம் இலவசமாக பேக்ஸ்(FAX) அனுப்பலாம்.

இப்போது வெளிநாட்டில் இருக்கும் நண்பருக்கோ அல்லது
நிறுவனத்திற்கோ பேக்ஸ் அனுப்ப வேண்டும் என்றால் எந்தவித
பணச்செலவும் இல்லாமல் இலவசமாக நம் இணையம் மூலமே
அனுப்பலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.

இந்ததளத்தின் மூலம் நாம் பேக்ஸ் அனுப்ப எந்த பயனாளர் 
கணக்கும் தேவையில்லை
இணையதள முகவரி : http://www.myfax.com/free/sendfax.aspx

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Monday, January 10, 2011

உங்களுடைய ஜிமெயில் முகவரியை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா?

  நீங்கள் முதலில் உங்களுடைய ஜிமெயில் முகவரியில் நுழைந்து கொண்டு கடைசியாக அடிபகுதியில் உள்ள Details என்பதை கிளிக் செய்யவும்.


கிளிக் செய்தவுடன் ஒரு விண்டோ தோன்றும் அதில் நீங்கள் கடைசியாக எப்போதெல்லாம் ஜிமெயில் அக்கவுண்டை ஒப்பன் செய்தீர்களோ அந்த நேரம் மற்றும் IP முகவரிகள் அனைத்தும் பட்டியலிடப்படும் அதில் நீங்கள் ஒப்பன் செய்யாத IP முகவரி இருந்தால் உடனே அதற்கு மேலே பாருங்கள் உங்கள் ஈ-மெயிலானது தற்போது வேறு எங்காவது ஓப்பன் செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரத்தை காட்டும்.

உடனே Sign out all other sessions என்பதை கிளிக் செய்து மற்ற இடத்தில் ஒப்பன் செய்யப்பட்டிருந்த உங்களுடைய ஈ-மெயிலை Sign out  செய்ய முடியும்.உடனே உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளவும்.


பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய