Sunday, May 12, 2013

தகுதியில்லாதவர்களுக்கு பணிவாய்ப்பு: கணினி ஆசிரியர்கள் புலம்பல்


ரசுப் பள்ளிகளில் கணிப்பொறியியல் பாடத்துக்கு பி.எட். முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பதிலாக, வேறு கல்வித் தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.
வரும் கல்வி ஆண்டிலாவது, தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்று கணிப்பொறி அறிவியலில் பி.எட். முடித்தவர்கள் காத்திருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப்பள்ளிகள் அனைத்திலும் கணிப்பொறியியல் பாடம் கற்றுத் தரப்படுகிறது.
பிற பாடங்களுக்கு அத்துறையில் பி.எட். முடித்த ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு வரும் நிலையில், கணிப்பொறியியல் பாடத்துக்கு மட்டும் இதுவரை பி.எட். ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிப்பொறியியல் பாடத்தைக் கற்றுத் தருவதற்கு பி.எட். பட்டம் பெறாதவர்களை அரசு நியமித்துள்ளது.
இந்தப் பள்ளிகளில் இன்னும் 1600-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனாலும், அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பணி நியமனத்தில், கணிப்பொறி அறிவியலில் பி.எட். படித்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் எல்காட் நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கணிப்பொறியியலில் ஏதாவது ஒரு பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருந்தால் போதும் என்ற அடிப்படையில் அவர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களுக்கு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் 667 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களைப் பணி நீக்கம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இவர்கள் பணியில் நீடிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது எனத் தெரிவித்துவிட்டனர்.

கணினி ஆசிரியர் நியமிக்கப்பட்ட விதம்:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 1999-ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 1,850 பேர் கணினி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு 2,500 ரூபாய் சம்பளம் என்றும், ஐந்தாண்டுகளுக்கு இந்தப் பணிகளில் இவர்கள் தொடரலாம் என்றும் அரசு அறிவித்தது.
கணிப்பொறி ஆசிரியர் என்பதைக் குறிக்கும் முதுநிலை கணினி அறிவியல் ஆசிரியர் என்பதற்கு பதிலாக கணினி பயிற்றுநர் என்று இவர்களது பணியின் பெயர் குறிப்பிடப்பட்டது.
இவர்களது ஐந்தாண்டு காலப் பணி 2004-ம் ஆண்டு நிறைவடைந்தது. இதையடுத்து, தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, 2006-ம் ஆண்டு ஓர் அரசாணை வெளியிடப்பட்டு, 2008-ம் ஆண்டு இவர்களுக்கென தனியாக ஒரு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வை எழுதிய 1,850 பேர்களில் 792 பேர் தேர்ச்சி பெறவில்லை.
இந்தத் தேர்வை எதிர்த்து 2008-ம் ஆண்டு முதுநிலையில் கணிப்பொறி அறிவியல் பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 2010ம் ஆண்டு மீண்டும் ஒரு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதை எழுதிய 792 பேர்களில் 652 பேர் தேர்ச்சி பெறவில்லை.
இந்த இரண்டாவது தகுதித் தேர்வை எதிர்த்து கணிப்பொறி அறிவியல் பட்டதாரிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த வழக்கில் கடந்த 2012 டிசம்பர் மாதம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
தீர்ப்புக்குப் பிறகும் இவர்கள் பணியில் தொடர்வதாக தற்போது சர்ச்சை எழுந்திருக்கிறது. இதுகுறித்து தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களின் கருத்தை அறிய தொடர்ந்து முயற்சித்த போதும், அவர்களின் கருத்தை அறிய முடியவில்லை.
மாணவர்கள் பாதிப்பு
அரசுப் பள்ளிகளில் முறையான கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், கணிப்பொறி அறிவியல் படித்த பட்டதாரிகள் மட்டுமல்லாமல், கணிப்பொறி பயிலும் மாணவர்களின் கல்வித்தரமும் பாதிக்கப்படுகிறது என்ற புகாரை பல்வேறு தரப்பினரும் முன்வைக்கிறார்கள்.
எங்கும் கணினி எதிலும் கணினி என்றாகிவிட்ட நிலையில், மாணவர்களின் மோகமும் கணினித் துறையை நோக்கியே திரும்பி வருகிறது.
இப்படி பெரும்பாலான மாணவர்களால் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இந்த பாடத்திற்கு ஆசிரியர்கள் முறையாக நியமிக்கப்படாததால் மாணவர்களுக்கு அந்தப் பாடம் குறித்த முழு அறிவை பெற முடியாத நிலையை அடைவார்கள் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் மற்ற பாடங்களைவிட கணினிப் பிரிவை அதிக மாணவர்கள் தேர்வு செய்வதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படியிருக்க அரசு மூலம் முறையான ஆசிரியர்கள் நியமிக்கப்படாத காரணத்தால் பள்ளி நிர்வாகமே ஒரு கணினி ஆசிரியரை நியமிக்கும் நிலை உள்ளது.
இதனால் முறையான கல்வியின்றி பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் தனது மேற்படிப்பில் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கருதுகின்றனர் கல்வியாளர்கள்.
கணினியை பாடமாக எடுத்துப் படிக்கும் ஆசிரியர்களின் பாதிப்பு ஒருபுறமிருக்க மற்றொருபுறம் மாணவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
நன்றி : புதிய தலைமுறை
.


பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Friday, May 10, 2013

கணினி ஆசிரியர்களின் கல்வித் தகுதி என்ன?

கணினி ஆசிரியர்களின் கல்வித் தகுதி என்ன என்பது குறித்து புதியதலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு  இங்கே கிளிக் செய்யவும்.

நன்றி :புதிய தலைமுறை 
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Monday, April 29, 2013

நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான "நெட்"
தேர்வில், யு.ஜி.சி.,முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண்
பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்து, சான்றிதழ்களை வழங்க
வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திருச்சி சரஸ்வதி, மதுரை இவாஞ்சலின், அலங்காநல்லூர் ராஜலட்சுமி உட்பட
சிலர் தாக்கல் செய்த 31 மனுக்கள்: பல்கலை, கல்லூரிகளில் உதவி
பேராசிரியர்களை நியமனத்திற்கு தேசிய தகுதித்தேர்வு(நெட்) நடத்த, பல்கலை
மானியக்குழு(யு.ஜி.சி.,) 2012 ஜூன் 4 ல் அறிவிப்பு வெளியிட்டது.
அதிகபட்சமாக முதல் இரண்டு தாள்களில் தலா 100 மதிப்பெண், மூன்றாவது தாளில்
150 மதிப்பெண் பெற வேண்டும் நிர்ணயித்திருந்தனர்.

தேர்ச்சிபெற குறைந்தபட்சம் பொதுப்பிரிவினர் முதல் இரண்டு தாள்களில் தலா
40 சதவீதம், மூன்றாவது தாளில் 50 சதவீதம்; இதர பிற்பட்டோர் (கிரிமீலேயர்
அல்லாதவர்கள்) முதல் இரண்டு தாள்களில் தலா 35 , மூன்றாம் தாளில் 45
சதவீதம்; ஆதிதிராவிடர், பழங்குடியினர் முதல் இரண்டு தாள்களில் தலா 35,
மூன்றாம் தாளில் 40 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என முதலில்
யு.ஜி.சி.,உத்தரவிட்டது.

இதனடிப்படையில் கோவை பாரதியார் பல்கலை, 2012 ஆக.,10 ல் மாநில தகுதித்
தேர்வு(செட்) அறிவிப்பு வெளியிட்டது. தேர்வு முடிவு 2013 பிப்.,9
வெளியானது. "நெட்" தேர்வு முடிவு யு.ஜி.சி., இணையதளத்தில் 2012
செப்டம்பரில் வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன் நெட், செட்
அனைத்து தாள்களிலும் பொதுப்பிரிவினர் 65 சதவீதம், இதர பிற்பட்டோர் 60
சதவீதம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 55 சதவீதம் மதிப்பெண்
பெற்றிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கருத முடியும் யு.ஜி.சி.,
அறிவிப்பு வெளியிட்டது.

இது சட்டவிரோதம். தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன், தேர்ச்சிக்கான
குறைந்தபட்ச மதிப்பெண் சதவீதத்தை மாற்றியமைத்துள்ளனர். தேர்வு
அறிவிப்பின் போதே தெரிவித்திருக்க வேண்டும். முதலில் அறிவித்தபடி, எங்களை
தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு
குறிப்பிட்டனர்.

நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில், மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
யு.ஜி.சி.,வக்கீல், "இதுபோன்ற வழக்குகள், கேரளா ஐகோர்ட்டில் நிலுவையில்
உள்ளன. அங்கு இறுதி தீர்ப்பு வரும்வரை, இங்கு உத்தரவை ஒத்திவைக்க
வேண்டும்,'' என்றார்.

நீதிபதி: கேரளா ஐகோர்ட் உத்தரவிற்காக காத்திருக்க முடியாது. சென்னை
ஐகோர்ட் முதன்மை பெஞ்ச், இதுபோன்ற மனுக்களை அனுமதித்துள்ளது.
யு.ஜி.சி.,முதலில் 2012 ஜூன் 4 மற்றும் பாரதியார் பல்கலை 2012 ஆக.,10ல்
அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக
அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு யு.ஜி.சி.,மற்றும் பாரதியார் பல்கலை 30
நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்க வேண்டும். மனுக்கள் முடிக்கப்படுகிறது,
என உத்தரவிட்டார்.

Thanks: http://teachertamilnadu.blogspot.com/2013/04/blog-post_27.html
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Thursday, April 25, 2013

வங்கி கணக்கை திருடும் வைரஸ்

புதுடில்லி:மத்திய, "சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி' வட்டாரங்கள் கூறியதாவது:"ராம்னிட்' என்ற புதிய வைரஸ், இணையதளங்கள் மூலமாக, கம்ப்யூட்டர்களுக்கு, வேகமாக பரவி வருகிறது. இணையதளங்களிலிருந்து, ஏதாவது ஒரு தகவலை பதிவிறக்கம் செய்யும்போது, அந்த வைரசும், பதிவிறக்கமாகி விடுகிறது.இந்த வைரஸ் மூலமாக, சம்பந்தபட்ட கம்யூட்டரிலுள்ள, வங்கி கணக்கு எண், அதன், "பாஸ்வேர்ட்' போன்ற முக்கிய விவரங்களை, சமூக விரோதிகள் திருடி சம்பந்தபட்டவரின் வங்கி கணக்கிலிருந்து, பணத்தை, தங்கள் கணக்கிற்கு சட்ட விரோதமாக மாற்றிவிடுகின்றனர்.இதனால், கம்ப்யூட்டரில், வங்கி கணக்கு குறித்த தகவல்களை வைத்திருப்பவர்கள், எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Sunday, March 24, 2013

சர்வதேச சிம் கார்டு அறிமுகம்


மும்பை -22 March 2013
வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் பயணிகளுக்கு உதவும் வகையில் சர்வதேச சிம் கார்டு மும்பையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹாட்மெயில் இ-மெயிலை உருவாக்கிய சபீர் பாட்டியாவின் கூட்டு முயற்சி இந்த ஜாக்ஸ்டர் சிம் கார்டு. இது குறித்து அவர் கூறியது: ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி இருபது லட்சம் பேர் இந்தியா வந்து செல்கின்றனர். இதில் 86 சதவீதம் பேர் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். சர்வதேச ரோமிங் கட்டணம் மிக அதிகமாக உள்ள நிலையில், ஜாக்ஸ்டர் சிம் கார்டு இந்த வகை பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதன் விலை ரூ. 600. தற்போது சந்தையில் விற்பனையாகும் சர்வதேச சிம் கார்டுகளை நோக்கும்போது இது 70 சதவீதம் விலை குறைந்தது. அமெரிக்கா, கானடா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய இடங்களில் இதனை உள்ளூர் எண் கொண்டு உள்ளூர் அழைப்புகளுக்கும் சர்வதேச அழைப்புகளுக்கும் பயன்படுத்தலாம்.
உலகின் பிற நாடுகளில் மேலும் குறைந்த அழைப்புக் கட்டணத்துக்கு இந்த சிம் கார்டைப் பயன்படுத்தலாம். அடுத்த இரு ஆண்டுகளில் பத்து லட்சம் சிம் கார்டுகளை விற்க திட்டமிட்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Friday, February 1, 2013

120 கணினி பயிற்றுநர் தேர்வுப் பட்டியல் வெளியீடு


சென்னை  ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில், சிறப்பு தேர்வு எழுதியவர்களில் இருந்து, 120 பேரை தேர்வு செய்து, அவர்களின் பட்டியலை, நேற்றிரவு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) வெளியிட்டது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில்தொகுப்பூதிய அடிப்படையில்கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிபுரிந்துவந்தனர்இவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக, 2009ல்சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. 1,000த்திற்கும்மேற்பட்டோர்தேர்வில் பங்கேற்றும்மிக குறைந்த அளவே தேர்ச்சி இருந்தது.
இதைத் தொடர்ந்து, 2010, ஜன., 24ல்மீண்டும்சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டதுமொத்தம், 150மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகளில்பல கேள்விகள் தவறாக இருந்ததாக கூறிதேர்வர்கள்,தொடர்ந்த வழக்கில்கடந்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், 20 கேள்விகளை (தலா 1 மதிப்பெண்நீக்கம் செய்துமீதம் உள்ள, 130மதிப்பெண்களில், 50 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற, 120 பேரை தேர்வு செய்து,அவர்களின் தேர்வுப் பட்டியலைஇணையதளத்தில், (www.trb.tn.nic.inநேற்றிரவுடி.ஆர்.பி., வெளியிட்டது.
இவர்களுக்குபள்ளி கல்வித்துறையில்இம்மாத இறுதிக்குள்பணி நியமனம் வழங்கப்படும் என,எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி  : தினமலர்
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Thursday, January 31, 2013

Special Recruitment of Computer Instructor 2006 - 07 - Re-examination Individual Query


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

SPECIAL TEST TO THE TEMPORARY COMPUTER INSTRUCTORS WORKING IN GOVERNMENT HIGHER SECONDARY SCHOOLS.
PROVISIONALLY SELECTED CANDIDATES 50% AND ABOVE IN THE SPECIAL RE-EXAMINATION HELD ON 24.01.2010
In pursuant to the orders of the Hon’ble High Court, Madras in W.A.No.837 of 2010 in W.P.No.17822 of 2010 dated 20.12.2012, the list of 120 candidates who have secured 65 marks and above (50% and above) to the post of Computer Instructors is released.
Further communication regarding posting and placement will be issued by the Director of School Education, Chennai.6
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. In correct list will not confer any right of enforcement.
          

Dated: 31-01-2013

Chairman
Home
For more information Click Here
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய