Monday, April 29, 2013

நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான "நெட்"
தேர்வில், யு.ஜி.சி.,முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண்
பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்து, சான்றிதழ்களை வழங்க
வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திருச்சி சரஸ்வதி, மதுரை இவாஞ்சலின், அலங்காநல்லூர் ராஜலட்சுமி உட்பட
சிலர் தாக்கல் செய்த 31 மனுக்கள்: பல்கலை, கல்லூரிகளில் உதவி
பேராசிரியர்களை நியமனத்திற்கு தேசிய தகுதித்தேர்வு(நெட்) நடத்த, பல்கலை
மானியக்குழு(யு.ஜி.சி.,) 2012 ஜூன் 4 ல் அறிவிப்பு வெளியிட்டது.
அதிகபட்சமாக முதல் இரண்டு தாள்களில் தலா 100 மதிப்பெண், மூன்றாவது தாளில்
150 மதிப்பெண் பெற வேண்டும் நிர்ணயித்திருந்தனர்.

தேர்ச்சிபெற குறைந்தபட்சம் பொதுப்பிரிவினர் முதல் இரண்டு தாள்களில் தலா
40 சதவீதம், மூன்றாவது தாளில் 50 சதவீதம்; இதர பிற்பட்டோர் (கிரிமீலேயர்
அல்லாதவர்கள்) முதல் இரண்டு தாள்களில் தலா 35 , மூன்றாம் தாளில் 45
சதவீதம்; ஆதிதிராவிடர், பழங்குடியினர் முதல் இரண்டு தாள்களில் தலா 35,
மூன்றாம் தாளில் 40 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என முதலில்
யு.ஜி.சி.,உத்தரவிட்டது.

இதனடிப்படையில் கோவை பாரதியார் பல்கலை, 2012 ஆக.,10 ல் மாநில தகுதித்
தேர்வு(செட்) அறிவிப்பு வெளியிட்டது. தேர்வு முடிவு 2013 பிப்.,9
வெளியானது. "நெட்" தேர்வு முடிவு யு.ஜி.சி., இணையதளத்தில் 2012
செப்டம்பரில் வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன் நெட், செட்
அனைத்து தாள்களிலும் பொதுப்பிரிவினர் 65 சதவீதம், இதர பிற்பட்டோர் 60
சதவீதம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 55 சதவீதம் மதிப்பெண்
பெற்றிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கருத முடியும் யு.ஜி.சி.,
அறிவிப்பு வெளியிட்டது.

இது சட்டவிரோதம். தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன், தேர்ச்சிக்கான
குறைந்தபட்ச மதிப்பெண் சதவீதத்தை மாற்றியமைத்துள்ளனர். தேர்வு
அறிவிப்பின் போதே தெரிவித்திருக்க வேண்டும். முதலில் அறிவித்தபடி, எங்களை
தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு
குறிப்பிட்டனர்.

நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில், மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
யு.ஜி.சி.,வக்கீல், "இதுபோன்ற வழக்குகள், கேரளா ஐகோர்ட்டில் நிலுவையில்
உள்ளன. அங்கு இறுதி தீர்ப்பு வரும்வரை, இங்கு உத்தரவை ஒத்திவைக்க
வேண்டும்,'' என்றார்.

நீதிபதி: கேரளா ஐகோர்ட் உத்தரவிற்காக காத்திருக்க முடியாது. சென்னை
ஐகோர்ட் முதன்மை பெஞ்ச், இதுபோன்ற மனுக்களை அனுமதித்துள்ளது.
யு.ஜி.சி.,முதலில் 2012 ஜூன் 4 மற்றும் பாரதியார் பல்கலை 2012 ஆக.,10ல்
அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக
அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு யு.ஜி.சி.,மற்றும் பாரதியார் பல்கலை 30
நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்க வேண்டும். மனுக்கள் முடிக்கப்படுகிறது,
என உத்தரவிட்டார்.

Thanks: http://teachertamilnadu.blogspot.com/2013/04/blog-post_27.html
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Thursday, April 25, 2013

வங்கி கணக்கை திருடும் வைரஸ்

புதுடில்லி:மத்திய, "சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி' வட்டாரங்கள் கூறியதாவது:"ராம்னிட்' என்ற புதிய வைரஸ், இணையதளங்கள் மூலமாக, கம்ப்யூட்டர்களுக்கு, வேகமாக பரவி வருகிறது. இணையதளங்களிலிருந்து, ஏதாவது ஒரு தகவலை பதிவிறக்கம் செய்யும்போது, அந்த வைரசும், பதிவிறக்கமாகி விடுகிறது.இந்த வைரஸ் மூலமாக, சம்பந்தபட்ட கம்யூட்டரிலுள்ள, வங்கி கணக்கு எண், அதன், "பாஸ்வேர்ட்' போன்ற முக்கிய விவரங்களை, சமூக விரோதிகள் திருடி சம்பந்தபட்டவரின் வங்கி கணக்கிலிருந்து, பணத்தை, தங்கள் கணக்கிற்கு சட்ட விரோதமாக மாற்றிவிடுகின்றனர்.இதனால், கம்ப்யூட்டரில், வங்கி கணக்கு குறித்த தகவல்களை வைத்திருப்பவர்கள், எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Sunday, March 24, 2013

சர்வதேச சிம் கார்டு அறிமுகம்


மும்பை -22 March 2013
வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் பயணிகளுக்கு உதவும் வகையில் சர்வதேச சிம் கார்டு மும்பையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹாட்மெயில் இ-மெயிலை உருவாக்கிய சபீர் பாட்டியாவின் கூட்டு முயற்சி இந்த ஜாக்ஸ்டர் சிம் கார்டு. இது குறித்து அவர் கூறியது: ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி இருபது லட்சம் பேர் இந்தியா வந்து செல்கின்றனர். இதில் 86 சதவீதம் பேர் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். சர்வதேச ரோமிங் கட்டணம் மிக அதிகமாக உள்ள நிலையில், ஜாக்ஸ்டர் சிம் கார்டு இந்த வகை பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதன் விலை ரூ. 600. தற்போது சந்தையில் விற்பனையாகும் சர்வதேச சிம் கார்டுகளை நோக்கும்போது இது 70 சதவீதம் விலை குறைந்தது. அமெரிக்கா, கானடா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய இடங்களில் இதனை உள்ளூர் எண் கொண்டு உள்ளூர் அழைப்புகளுக்கும் சர்வதேச அழைப்புகளுக்கும் பயன்படுத்தலாம்.
உலகின் பிற நாடுகளில் மேலும் குறைந்த அழைப்புக் கட்டணத்துக்கு இந்த சிம் கார்டைப் பயன்படுத்தலாம். அடுத்த இரு ஆண்டுகளில் பத்து லட்சம் சிம் கார்டுகளை விற்க திட்டமிட்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Friday, February 1, 2013

120 கணினி பயிற்றுநர் தேர்வுப் பட்டியல் வெளியீடு


சென்னை  ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில், சிறப்பு தேர்வு எழுதியவர்களில் இருந்து, 120 பேரை தேர்வு செய்து, அவர்களின் பட்டியலை, நேற்றிரவு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) வெளியிட்டது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில்தொகுப்பூதிய அடிப்படையில்கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிபுரிந்துவந்தனர்இவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக, 2009ல்சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. 1,000த்திற்கும்மேற்பட்டோர்தேர்வில் பங்கேற்றும்மிக குறைந்த அளவே தேர்ச்சி இருந்தது.
இதைத் தொடர்ந்து, 2010, ஜன., 24ல்மீண்டும்சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டதுமொத்தம், 150மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகளில்பல கேள்விகள் தவறாக இருந்ததாக கூறிதேர்வர்கள்,தொடர்ந்த வழக்கில்கடந்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், 20 கேள்விகளை (தலா 1 மதிப்பெண்நீக்கம் செய்துமீதம் உள்ள, 130மதிப்பெண்களில், 50 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற, 120 பேரை தேர்வு செய்து,அவர்களின் தேர்வுப் பட்டியலைஇணையதளத்தில், (www.trb.tn.nic.inநேற்றிரவுடி.ஆர்.பி., வெளியிட்டது.
இவர்களுக்குபள்ளி கல்வித்துறையில்இம்மாத இறுதிக்குள்பணி நியமனம் வழங்கப்படும் என,எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி  : தினமலர்
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Thursday, January 31, 2013

Special Recruitment of Computer Instructor 2006 - 07 - Re-examination Individual Query


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

SPECIAL TEST TO THE TEMPORARY COMPUTER INSTRUCTORS WORKING IN GOVERNMENT HIGHER SECONDARY SCHOOLS.
PROVISIONALLY SELECTED CANDIDATES 50% AND ABOVE IN THE SPECIAL RE-EXAMINATION HELD ON 24.01.2010
In pursuant to the orders of the Hon’ble High Court, Madras in W.A.No.837 of 2010 in W.P.No.17822 of 2010 dated 20.12.2012, the list of 120 candidates who have secured 65 marks and above (50% and above) to the post of Computer Instructors is released.
Further communication regarding posting and placement will be issued by the Director of School Education, Chennai.6
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. In correct list will not confer any right of enforcement.
          

Dated: 31-01-2013

Chairman
Home
For more information Click Here
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Friday, November 9, 2012

"நெட்(NET)" தகுதித் தேர்வு டிசம்பர் 2012


தேசிய அளவில் நடத்தப்படும் கல்லூரி ஆசிரியர் பணியிடத்துக்கான "நெட்(NET)" தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க November 16 கடைசி தேதியாகும்.ஆண்டுதோறும், இந்தத் தகுதித் தேர்வு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். இந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி "நெட்' தேர்வு நடத்தப்பட்டது. இப்போது டிசம்பர் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். http://www.ugcnetonline.in/ & http://www.ugc.ac.in/ போன்ற இணையதளங்களில் இதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இணையதள முகவரி:
http://www.ugcnetonline.in/
http://www.ugc.ac.in/
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Sunday, April 1, 2012

தமிழ்நாடு B.Ed., கணினி அறிவியல் பட்டதாரிகள் சங்கம் - உண்ணாவிரதப்போராட்டம்


நாள் : 07-04-2012 சனிக்கிழமை

இடம் : திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்
                 ( அண்ணாசிலை அருகில்)

நேரம் : காலை 8.00 மணி

    மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய