Friday, March 11, 2011

தங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்ய மறுக்கிறதா!

தங்களின் மவுஸ் வேலை செய்ய மறுக்கிறதா! கவலை வேண்டாம் ஓர் தற்காலிக தீர்வு.

நமது கணினியில் நாம் கீ-போர்டை காட்டிலும் அதிகம் பயன்படுத்துவது மவுஸைதான். அப்படியிருக்கும் போது ஓர் அவசர காலத்தில் தங்களின் மவுஸ் ஆனது வேலை செய்யவில்லை என்றால் எப்படி இருக்கும்...இது மாதிரி நிகழும் இந்த பிரச்சனையை தற்காலிகமாக போக்க ஓர் வழி உள்ளது. தங்களின் கணினி முறையில் சிறிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த முறையை செயல்படுத்தலாம். இதன் மூலம் தங்களின் கீ-போர்டினையே மவுஸ் ஆக பயன்படுத்தலாம். இந்த முறை STICKY KEYSஎன அழைக்கப்படும்.

இந்த முறையை தங்களின் கணினியில் செயல்படுத்த வேண்டுமா. முதலில் தாங்கள் செய்ய வேண்டியது.

1. தங்களின் கீ-போர்டில் SHIFT கீயை 5 முறை அழுத்துங்கள். தொடர்ந்து,
2.தற்போது தங்களின் விண்டோவில் STICKY KEYS என்னும் ஓர் சிறிய திரை தோன்றும். அதில் SETTINGS என்பதைனை கிளிக் செய்யவும்.
3.பின்னர் தோன்றும் திரையில் MOUSE என்பதைனை கிளிக் செய்யவும். உதவிக்கு மேலே உள்ள புகைபடத்தை காணவும்.
4. பின்னர் USE MOUSE KEYS என்பதில் டிக் மார்க் அடையாளத்தை ஏற்ப்படுத்தவும். பின்னர் APPLY---OK என்பதைனை தந்து வெளியேறவும்.
5.தாங்கள் மேற்கொள்ள வேண்டிய முறை முடிந்தது.

இனி தங்களின் கீபோர்டினை எப்படி மவுஸ் ஆக பயன்படுத்துவது என காணலாம்.

1.தங்களின் மவுஸ் கர்சர் மேலே நகர்த்த வேண்டும் என்றால், தங்களின் கீபோர்டில் வலதுகை ஓரமாக இருக்கும் நம்பர் பட்டன்களில் 8 என்பதை அழுத்தவும்.
2.கீழே நகர்த்த வேண்டுமென்றால்-0
3.இடதுகை (LEFT)ஓரமாக நகர்த்த வேண்டுமென்றால்-4
4.வலதுகை(RIGHT) ஓரமாக நகர்த்த வேண்டுமென்றால்-6

மேலும் ஓர் செயலை OK OR SELECT செய்ய வேண்டுமென்றால் 5 என்னும் கீயை அழுத்தவும். அதாவது தங்களின் மவுஸில் LEFT CLICK மேற்கொள்ளும் முறையை இது மேற்கொள்ளும்.

நன்றி:http://ungalweb.blogspot.com
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய